அமெரிக்க வரிகளால் ஒண்டாரியோவில் பாதிக்கப்படும் வேலைவாய்ப்புகள்

ஒண்டாரியோ மாகாணம் இந்த ஆண்டில் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளக்கூடும் என்று புதிய அறிக்கை எச்சரிக்கின்றது.

இதற்கான முக்கிய காரணமாக அமெரிக்கா விதிக்கும் வரிகள் குறிக்கப்படுகின்றன.

இதன் விளைவாக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் இழக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒண்டாரியோ நிதி பொறுப்புக்கூறல் அலுவலகம் (FAO) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா விதிக்கும் வரிகள் இல்லாத நிலைமையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்த ஆண்டு மட்டும் 68,100 வேலைவாய்ப்புகள் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் இது 119,200 ஆகவும், 2029 இல் 137,900 வேலைவாய்ப்பு இழப்பாகவும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது

Exit mobile version