அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, குழந்தை பெற்றுக்கொண்ட பெண், குழந்தை தனக்கு தான் சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தை நாடியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளான ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாயை அணுகி, தங்களது குழந்தையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர்.
