சட்டவிரோதமாக கனடாவிற்கு பிரவேசித்த மூவர் கைது

கனடாவின் பொர்ட் எரெய் ரயில் பாலம் வழியாக கடந்த மாதம் சட்டவிரோதமாக எல்லை கடந்த மூன்று வெளிநாட்டவர்கள் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மூவரில் ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும், மற்றொருவர் சற்று நேரம் ஓடிய பின்னர் பிடிபட்டதாகவும் கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது நபர் ஒருவர் காத்திருந்த வாகனத்தில் ஏறி தப்பியுள்ளார்.

அந்த வாகனம் தப்பும்போது மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது மோதுவதற்கருகில் சென்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி, முக்கிய சந்தேகத்தாரான கியூபா நாட்டவரான அலெக்ஸான்டர் கார்ட்னஸ் மற்றும் அவரது மனைவி யெனி ஜஸ்டூ தாமாகவே பொலிசாரிடம் சரணடைந்தனர் என்று கனடா எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்டெனெஸ் மற்றும் அவருடன் இருந்த மற்ற இரு புலம்பெயர்வோர் பின்னர் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

Exit mobile version