கனடாவில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் வாகனம் மீது மோதி விபத்து: ஒருவர் பலி!

 கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் பொதுச் சாலையில் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 2:20 மணியளவில், ‘பீச் கிங் ஏர் 200’ ரக சிறிய ரக விமானம் ஒன்று பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில் உள்ள ‘ஃபூட்ஹில்ஸ் போல்வர்டு’ சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது.

அப்போது எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் மோதியது. விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். உயிரிழந்தவர் சாலையில் சென்ற வாகனத்தில் இருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version