ஒன்டாரியோ வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

ஒன்டாரியோ மாகாண வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதியன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மாகாண நிதியமைச்சர் பீட்டர் பெத்லென்பால்வி உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்களுக்கிடையில் ஒன்டாரியோவை பாதுகாக்க வேண்டிய அனைத்தையும் அரசு செய்யத் தயார்” என தெரிவித்தார்.

வர்த்தகச் சுதந்திரத்தை நாடு முழுவதும் உருவாக்கும் திட்டமொன்று தேவை எனவுதட மே 15 அன்று, அந்த திட்டத்தை மாகாண வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தக அழுத்தங்களுக்கு எதிராக $22 பில்லியன் மதிப்பிலான கட்டமைப்புத் திட்ட முதலீட்டை மேற்கொள்வதாக மாகாண முதல்வர் டக் போர்ட் வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா மீது அமெரிக்கா வரி விதிப்பதாக அறிவித்ததன் பின்னர் சமர்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version