டொரோண்டோவில் உள்ள நோர்த் யோர்க் பகுதியில் 10வது மாடியில் உள்ள பால்கனியிலிருந்து விழுந்த குழந்தை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் ஜேன் வீதி இல் அமைந்துள்ள 2801ஆம் இலக்க குடியிருப்பு கட்டிடத்துக்கு அருகிலுள்ள டிரிப்ட்வுட்க்கு கிழக்கே சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை வீழ்ந்து கடுமையாக காயமடைந்த நிலையில் விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், குழந்தையின் நிலைமை மிகவும் சிக்கலானது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் தற்போது எந்தவொரு குற்றச்செயல் தொடர்பும் இருப்பதற்கான சாட்சியங்கள் இல்லை எனவும், இது ஒரு விபத்து எனவே தெரிகிறது எனவும் டொரோன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.