வர்த்தகப் போரால் சரிந்த மெக்டொனால்ட் விற்பனை!

அமெரிக்காவில் மெக்டொனால்ட் விரைவு உணவு நிறுவனம் முதல் காலாண்டு லாபம் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அமெரிக்காவில் நடுத்தர, குறைந்த வருமானம் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகமெக்டொனால்ட்தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போரால் லாபம் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மெக்டொனால்ட் விற்பனை அமெரிக்காவில் 3.6 விழுக்காடும் உலகளவில் ஒரு விழுக்காடும் சரிந்துள்ளது.

உணவகத்திற்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தெரிவித்தார்.

அதிக வருமானம் பெறும் வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் மெக்டொனால்ட் வாங்குவதாக தெரிவித்த நிறுவனம், மக்களை கவரும் வகையில் கூடுதல் சலுகைகள் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

Exit mobile version