கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. 

இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை (31) கூடுவதெனத் தீர்மானித்துள்ளது. 

அன்று கூடி, பாண் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Exit mobile version