ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் இன்று (11) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஷிரான் பாசிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைப் பயன்படுத்தி, கம்பஹா பகுதியில் அவரது தந்தையின் பெயரில் சொகுசு வீடு ஒன்றை விலைக்கு வாங்கியமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Exit mobile version