யேமனின் முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணைப் பகுதியில் தங்களது அதிகாரத்தை ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் யேமனின் ஒட்டுமொத்த செங்கடல் கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், யேமனின் மோகா விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு சவூதி படைகள் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூதிகளுடன் தொடர்புடைய அல்-மஸீரா (Al-Masirah) தொலைக்காட்சி அலைவரிசை செய்தி வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
