அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் சிவில் இன்ஜினியராக வேலை செய்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த முகமது ஜாபர் உசேன் என்பவர், திருமணமான 17 நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்தமை உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பின்னர் சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக அவருடன் தங்க்கி இருந்தவர்கள் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது
உயிரிழந்த மணமகனின் உறவினர்கள் , உசேனின் உடலை ஹைதராபாத்திற்கு கொண்டு வர இந்திய மத்திய அரசின் உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் மணமகனின் மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் விசாரணைகாள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.
