ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% தீர்வை 

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டமானது ரஷ்யாவின் வலுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளை இலக்கு வைப்பதுடன், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் மூத்த அதிகாரிகளையும் குறிவைக்கிறது. மேற்கத்திய நாடுகளின் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் ‘நிழற்படைக் கப்பல்களை’ (shadow fleet) இலக்கு வைக்கும் இச்சட்டம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை பெருமளவில் வாங்கும் நாடுகளுக்கு 100% வரை தீர்வை வரிகளை (Tariffs) விதிக்கும் அதிகாரத்தை ட்ரம்பிற்கு வழங்குகிறது.

Exit mobile version