கனடாவில் மணிக்கு 184 கி.மீ வேகத்தில் பயணித்த சாரதிக்கு கடுமையான தண்டனை

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமாக, மணித்தியாலத்திற்கு 184 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்ற 26 வயது இளைஞரைக் கியூபெக் மாகாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.வியாழக்கிழமை அதிகாலை நெடுஞ்சாலை 15 இல் போயஸ்ப்ரியாண்ட் பகுதியில் உள்ள வீதிப் புனரமைப்பு மண்டலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.அங்கு மணிக்கு 80 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் மணிக்கு 184 கி.மீ வேகத்தில் காரைச் செலுத்தியுள்ளார்

Exit mobile version