பிரான்ஸ், சுவிஸ் நிறுவன சொத்துகளுக்கு கட்டுப்பாடு ; மேலைநாடுகளுக்கு புட்டினின் அதிரடி நடவடிக்கை

உக்ரைன் போருக்கு மேலைநாடுகள் வழங்கி வரும் ஆதரவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் சொத்துகளை தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உணவு உற்பத்தி நிறுவனமான நெஸ்லே (Nestlé) மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த ஓச்சான் (Auchan), லெராய் மெர்லின் (Leroy Merlin) ஆகிய நிறுவனங்களின் ரஷ்ய துணை நிறுவனங்கள் தற்காலிக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version