வசர நேரங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்படும் கனடாவின் தேசிய “அலர்ட் ரெடி” அமைப்பின் சோதனை வரும் புதன்கிழமை நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.
சோதனை, கியூபெக் மாகாணத்தை தவிர்த்து மற்ற எல்லா மாகாணங்களிலும் மற்றும் பிரதேசங்களிலும் நடைபெறும்.
மாகாண அல்லது பிராந்திய அவசர மேலாண்மை அமைப்புகள் வெளியிடும் சோதனை செய்திகள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற வயர்லெஸ் சாதனங்களில் பகிரப்படும்.
அவசர நிலையை ஒத்ததாக அமைக்கப்பட்ட இந்தச் செய்திகள், தனித்துவமான அலர்ட் சத்தத்துடன் ஆரம்பமாகும். இது ஒரு உண்மையான அவசர எச்சரிக்கை அல்ல, பொதுமக்களுக்கு அமைப்பின் செயல்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
2024-ஆம் ஆண்டிலிருந்து, இந்த அலர்ட் ரெடி அமைப்பு 877 அவசர எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
கடுமையான சூழ்நிலை எச்சரிக்கைகள், புயல், வெள்ளம், குழந்தைகள் கடத்தப்பட்டால் வழங்கப்படும் AMBER எச்சரிக்கைகள் ஆகியவை அடங்கும். பொதுமக்கள் இந்த அவசர எச்சரிக்கைகளை நிராகரிக்க முடியாது.
சில மொபைல் சாதனங்களில் அவை தோன்றாமலும் இருக்கலாம்.