பிரபல பாடகருக்கு ஓராண்டு சிறை தண்டனை

தென் கொரியாவைச் சேர்ந்த கே-பாப் இசைக்குழுவின், பிரபல பாடகருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டாய இராணுவ சட்டத்தை மீறிய வழக்கில் நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவின் பின்னணி என்ன? 

தென் கொரிய சட்டப்படி உடற்தகுதி படைத்த அனைத்து ஆண்களும் குறிப்பிட்ட வயதுக்குள் குறைந்தபட்சம் 18 மாதங்கள் இராணுவத்திலோ அல்லது மாற்றுச் சமூக சேவைகளிலோ கட்டாயம் பணியாற்ற வேண்டும். அந்த வகையில் பாடகர் மின்-ஹோ, சியோலில் உள்ள சமூக சேவை மையத்தில் மாற்றுச் சேவை பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 

ஆனால், பணிக்காலத்தில் எந்தவித முறையான அனுமதியும் இன்றி சுமார் 102 நாட்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் பாடகர் மின் – ஹோ மீது இராணுவ நிர்வாகம் சார்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சியோல் மேலை மாவட்ட நீதிமன்றம், நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய இராணுவச் சேவையை அலட்சியப்படுத்தியது கடுமையான குற்றம் என்று சுட்டிக்காட்டியது. 

Exit mobile version