கனடாவில் 18 வயது இளைஞன் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது

கனடாவின் யோக்டன் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.வன்முறை இணையக் குழுவொன்றுடன் தொடர்புடைய காணொளிகளைப் பதிவேற்றியதாக குறித்த இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சந்தேகத்திற்குரிய இணைய நடவடிக்கைகள்” குறித்து கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரின் வடமேற்கு பிராந்திய ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமலாக்கக் குழு கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி இந்த இளைஞரைக் கைது செய்தது.

Exit mobile version