கனடாவின் தேசிய ஒற்றுமை குறித்து எழுந்துள்ள சவால்

கனடாவின் தேசிய ஒற்றுமை குறித்து கடுமையான சவால் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில் இறையாண்மை மற்றும் தனிநாடு கோரும் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, கனடாவின் தேசிய ஒற்றுமை தொடர்பான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.கனடாவில் நீடிப்பதா அல்லது பிரிந்து செல்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதா என்பது தொடர்பில் அல்பெர்ட்டா மாகாண மக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்கவுள்ள நிலையிலேயே இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது.’பார்ட்டி கியூபெக்வா’ கட்சியின் வெற்றி அல்பெர்ட்டா பிரிவினைவாதிகள் தனித்து நிற்கவில்லை என்பதைக் காட்டுகிறது என ‘அல்பெர்ட்டா புரோஸ்பெரிட்டி புராஜெக்ட்’ அமைப்பின் தலைமை நிர்வாகியுமான மிட்ச் சில்வெஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version