கனடாவில் இடம்பெறும் நூதன மோசடிகள் குறித்து எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களின் பாலியல் ரீதியிலான போலி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்கி, அவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் கனடாவின் தேசிய தகவல் மையமான சைபர்டிப் எச்சரித்துள்ளது.சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டல்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான Cybertip.ca தளம் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.குற்றவாளிகள் சிறுவர்களின் சுயவிவரப் படங்களை மட்டுமே பயன்படுத்தி, AI மூலம் பாலியல் ரீதியிலான போலி “டீப்ஃபேக்” காட்சிகளை உருவாக்கும் ஒரு புதிய போக்கு அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

Exit mobile version