இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஒஸ்ட்ரியத் தலைநகர் வியன்னா நோக்கிப் பயணித்த ஒஸ்ட்ரியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த விமானம் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.பல்கேரிய போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வௌியிட்டுள்ளன.மொத்தம் 51 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 57 பேருடன் பயணித்த எயார்பஸ் ஏ320 ரக விமானம், டெல் அவிவிலிருந்து மாலை 6:40 க்கு வியன்னா நோக்கிப் புறப்பட்டது.ரோமேனிய எல்லையை ஒட்டிய வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, வெடிகுண்டு அபாயம் குறித்தான எச்சரிக்கை சமிக்ஞை விமானக் குழுவினருக்குக் கிடைத்ததை அடுத்து, உடனடியாக விமானத்தை சோஃபியாவுக்குத் திருப்ப முடிவெடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல்கேரிய விமானப் படையின் போர் விமானம் ஒன்று அந்தப் பயணிகள் விமானத்தைப் பாதுகாப்பாக சோஃபியா விமான நிலையத்தில் தரையிறங்கும் வரை வழிநடத்திச் சென்றது.இரவு 9:25 அளவில் விமானம் சோஃபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதும், அதிலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- Home
- டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல் அவிவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
By me24tamil - 2
- 0

Related Content
-
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம்
By me24tamil 1 week ago -
தங்கொட்டுவ பகுதியில் பெண் கொலை!
By me24tamil 1 week ago -
விஹாரமஹாதேவி பூங்காவில் 4 ஆவது நாளாகவும் பிக்குமாரின் சத்தியாகிரகம் தொடர்கிறது
By me24tamil 1 week ago -
நாட்டின் பல பகுதிகளுக்கு 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
By me24tamil 1 week ago -
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன!
By me24tamil 2 weeks ago -
போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் புத்தசாசன அமைச்சில் முக்கிய பேச்சுவார்த்தை
By me24tamil 2 weeks ago