கனடாவின் நோவா ஸ்கோஷியாவின் ஃபால்மவுத் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்து சனிக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு, Highway 101-இல் Hantsport மற்றும் Falmouth இடையில் நடைபெற்றதாக RCMP தெரிவித்துள்ளது.
ஹொண்டா சிவிக் மற்றும் நிசான் சென்ட்ரா என்ற இரண்டு கார்களும் கிழக்கே பயணித்துக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது.
ஹொண்டா சிவிக் காரில் பயணித்த 43 வயது ஆண் மற்றும் 45 வயது பெண் இருவரும் பால்மவுத் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நிசான் சென்ட்ரா காரில் பயணித்த 45 வயது பெண் மற்றும் 58 வயது ஆண் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றொரு பயணி, 50 வயது ஆண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
29 வயது ஆண், மருத்துவமனைக்கு விமானத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.