டொனால்ட் ட்ரம்ப் கட்டாரில் இருந்து அபுதாபிக்கு விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று மாலை கட்டாரில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார்.

அவரை சர்வதேச விமான நிலையத்தில் அமீரக ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்றார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13ஆம் திகதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார்.

அபுதாபியின் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் பின் கலீபா அல் தானியை சந்தித்து பேசி இருதரப்பு வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தார்.பிறகு இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதனை தொடர்ந்து இன்று 15 ஆம் திகதிமாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் கத்தாரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.முன்னதாக அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட் விமானங்கள் இருபுறமும் சூழ பாதுகாப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Exit mobile version