முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்!

நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

 கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலையானதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

2021 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து தரமற்ற சேதன பசளையினை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version