வேகமாக பரவிவரும் கொரோனா உப திரிபு; இலங்கைக்கு ஆபத்தா? – பேராசிரியர் வெளியிட்ட தகவல்

ஆசிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் பரவிவரும் கொவிட்-19 தொற்றின் உப திரிபான ஜே.என்.வன் திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் கற்கைகள் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைப் பதிவிட்டுள்ளார். எவ்வாறாயினும் குறித்த திரிபு இதுவரையில் இலங்கையில் பதிவாகவில்லை என்றும் அவர் தமது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என தேசிய தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version