இலங்கையின் பிரபல நடிகை காலமானார்!

இலங்கை சினிமாவின் ராணி என்று போற்றப்படும் சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் அவர் இன்று சனிக்கிழமை 24 ஆம் திகதி அதிகாலை காலமானார்.

மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

அத்துடன் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார்.

பைலட் பிரேமநாத் என்ற இந்திய- இலங்கை கூட்டுத் திரைப்படத்தில் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கதாநாயகியாக நடித்ததன் மூலம், தமிழ் இரசிகர்களிடையே அவர் பேசப்படும் ஒருவரானார்.

Exit mobile version