ஒலுபட்டாவ வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

கஹதுடுவ, சியம்பலாகொட, ஒலுபட்டாவ வாவியில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வாவிக்குச் சென்று சோதனை மேற்கொண்ட போது, ​​சடலம் மிதந்துக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் மஞ்சள் நிற டி-சர்ட் மற்றும் அரைக் காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஏதேனும் சம்பவத்தின் விளைவாகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது வழியில் தண்ணீரில் விழுந்தாரா என்பது குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version