நாடு முழுவதும் PCR பரிசோதனைகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய கொவிட் திரிபு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த புதிய வகை திரிபானது நாட்டிற்குள் நுழையும் அபாயம் இல்லை என்று கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version