இலங்கை தமிழர்களை கேவலப்படுத்தும் தென்னிந்திய தொலைக்காட்சி

தென்னிந்திய தொலைக்காட்சிகள் இலங்கை தமிழர்களை தங்கள் டீ ஆர் பி க்காக மிகவும் கேவலப்படுத்தும் விதமாக காட்டுவதாக இலங்கையர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தென்னிந்திய தொலைகாட்சிகளில் இடம்பெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அண்மைய காலங்களில் இலங்கை தமிழர்களை உள்ளீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

மலையகம் நுவரெலியாவில் இருந்து  தென்னிந்திய  தொலைக்காட்சியில்  பாடல்  போட்டியில் பங்கேற்ற சிறுமி   இலங்கை தொலைகாட்சியில் பாடும் போது மிகவும் நேர்த்தியாக ஸ்டைலாக ஆடை அணிந்து பாடுகின்றார்.

அதே சிறுமி தென்னிந்திய  தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மிகவும் ஏழ்மையான கோலத்தில் தோற்றமளிக்கின்றார்.

இந்நிலையில்  தங்களது நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களை கவர்ந்திழுப்பதற்காகவும்,  தங்களுடைய  டீ ஆர் பி க்காகவும்   இவ்வாறு இலங்கைவாழ் தமிழர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் கேவலப்படுத்துவதை  தென்னிந்திய  தொலைக்காட்சிகள்  நிறுத்த வேண்டும் என இலங்கை மக்கள் கடும் சினம் வெளியிட்டுள்ளனர்.    

Exit mobile version