விபத்தில் 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா இடம்பெற்று வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது.

இதில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து டிரைவரின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நைஜீரியாவின் மோசமான வீதிகளினால் போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் வேகமாக வாகனம் ஓட்டுவதாலும் விபத்துக்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் நைஜீரியாவில் 9,570 வீதி விபத்துககளினால் 5,421 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version