பெருமளவான ஹெராயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

03 கிலோ 655 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸ் பிரிவின் புஞ்சி நைவலவத்த பகுதியில் வைத்து நேற்று (31) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது ​​போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் அளவீட்டு கருவிகளும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புஞ்சி நைவலவத்த, எசெல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version