கனடாவில் நூதனமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகை போதைப் பொருட்கள்

கடனாவில் நூதனமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகை போதைப் பொருட்களை ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

டார்க் வெப் மற்றும் கனடா போஸ்ட் மூலம் நாடு முழுவதும் போதைப்பொருட்களை அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2024 நவம்பரில் தொடங்கிய Project Bionic எனப்படும் இந்த விசாரணையில், பொலிஸார் 2025 மார்ச் 10ஆம் திகதி ஒட்டாவாவில் உள்ள கனடா போஸ்ட் மையத்தில் இருவரை கைது செய்தனர்.

அப்போது, நாடு முழுவதும் அனுப்பப்படவிருந்த 86 பார்சல்களில் பல்வேறு வகை போதைப்பொருட்கள் இருந்ததாக தெரிவித்தனர்.

Exit mobile version