கனடா தொழிலாளர் நலத்திட்டமான CWB மூலம், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், முதலாவது கொடுப்பனவு ஜூலை 12ஆம் திகதி வழங்கப்படும். அதன் பிறகு, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை, ஒக்டோபர் 11 மற்றும் ஜனவரி 10, 2026 ஆகிய திகதிகளில் கூடுதலாக கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நலத்திட்டத்தின் பயனாளர்களில் ஏற்கனவே 2024ஆம் ஆண்டில் இதற்காக பதிவு செய்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒற்றை நபர்களுக்கான வருடாந்த கொடுப்பனவு அதிகபட்சம் $1,633 ஆகும்.