சன் தொலைக்காட்சியில் ஆனந்த ராகம், ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சீரியல் நடிகை ரிஹானா பேகம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்த இவர், பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சீரியல் நடிகர்கள் அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் பிரச்சனை வெடித்தபோது, திவ்யா ஸ்ரீதருக்கு ஆதரவாகப் பேசிய ரிஹானா தொடர்ந்து நடிகைகளுக்கு நிகழும் பிரச்சினைகள் குறித்துப் பேசிவந்தார்.
இந்நிலையில் தான், திருமணம் செய்ததை மறைத்து பணம் மோசடி செய்ததாக நடிகை ரிஹானா பேகம் மீது பொலிசில் முறைப்பாடு அளித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. தன்னை மோசடி செய்ததாக ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தன்னுடன் நட்பாகப் பழகி வந்த ரிஹானா பேகம் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் விவாகரத்து ஆனதாகக் கூறியதால், தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இதன்பின் ரிஹானாவுக்கு ரூ.20 இலட்சம் வரை பணம் செலவு செய்த நிலையில், அவரது வீட்டிற்குச் சென்றபோது கணவருடன் விவாகரத்து ஆகாமலேயே தன்னைத் திருமணம் செய்து மோசடி செய்ததாக பூந்தமல்லி பொலிஸ் நிலையத்தில் ராஜ் கண்ணன் முறைப்பாடு அளித்துள்ளார். இந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில் இருவரையும் இன்று மாலை விசாரணை செய்ய பூந்தமல்லி பொலிசார் முடிவு செய்துள்ளனர்.