கனடாவில் மாயமான இந்திய மாணவர் தொடர்பில் வெளியாகியுள்ள துயரச் செய்தி

கனடாவுக்கு கல்வி கற்பதற்காகச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாயமாகியுள்ள விடயத்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலக்கமடைந்திருந்த நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஏப்ரல் மாதம், இந்தியாவின் ஹரியானாவிலிருந்து கனடாவுக்குக் கல்வி கற்பதற்காக சென்றார் சாஹில் குமார் (22).

மே மாதம் 16ஆம் திகதி, ஹாமில்ட்டனில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து, ரொரன்றோவில் தான் கல்வி கற்கும் Humber கல்லூரிக்குப் புறப்பட்டுள்ளார் குமார்.

1.00 மணியளவில், தனது கல்லுரி இருக்கும் இடத்துக்கு அருகே குமார் நடமாடும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அதற்குப் பிறகு குமாரைக் காணவில்லை.

இந்நிலையில், ரொரன்றோவில் குமாருடைய உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அவரது மரணத்தின் பின்னணியில் குற்றச்செயல் எதுவும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version