கனடாவின் பீல் பிராந்தியத்தில் மூன்று லட்சம் டொலர் பெறுமதியான திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீல் பிராந்திய காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிராம்ப்டனைச் சேர்ந்த இரு ஆண்கள், எல்.சி.பி.ஓ LCBO மது கடைகளில் திட்டமிட்ட அடிப்படையில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் 3 இலட்சம் டொலர் மதிப்பிலான திருட்டு – இரண்டு பேர் கைது | 2 Brampton Men Charged In Prolific 300K
திட்டமிட்ட திருட்டுகள்
இந்த திருட்டுகளால் ஏற்பட்ட மொத்த நஷ்டம் சுமார் 3 இலட்சம் கனடிய டொலர் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருட்டுகள் எப்போது, எத்தனை கடைகளில் நடந்தன என்பது தெளிவாக வெளியிடப்படவில்லை.
விசாரணையின் விளைவாக, சந்தேகநபர்களுக்கு மொத்தம் 35 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 25 வயதான அனுஜ் குமார் என்ற நபர் இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
29 வயதான சிமர்ப்ரீத் சிங் என்ற நபர் திட்டமிட்ட வகையில் நடந்த திருட்டுகளில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படலாம் என்றும், வழக்கில் மேலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்றும் அறிவித்துள்ளது.