இஸ்ரேலில் சிக்கிக் கொண்ட கனடிய ஹாக்கி வீரர்

கனடிய ஹாக்கி வீரர் ஒருவர் இஸ்ரேலில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

“நான் ஹாக்கி விளையாட வந்தேன் – ஆனால் இப்போது குண்டு சத்தங்களுக்கு நடுவில் உயிர் பாதுகாப்பிற்காக ஓடிக்கொண்டு இருக்கிறேன்” என 29 வயதான கனடா ஹாக்கி வீரர் டிமொத்தி பேய்ன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் எலீட் ஹாக்கி லீக் (IEHL)-ல் ஜெருசலேம் கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் அவர், கடந்த வாரம் தான் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

இஸ்ரேலில் சிக்கிக் கொண்ட கனடிய ஹாக்கி வீரர் | Canadian Hockey Player Trapped In Israel

ஆனால் அதைத் தொடர்ந்து ஈரானுடன் தொடங்கிய போரால், தோற்றுப்போனவனாக உணர்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். “இரவு 11, 12 மணிக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்குகிறது.

எங்கள் வீடு அருகே குண்டு விழுந்தது. சாளரங்கள் உடைந்தன, சுவர்கள் இடிந்தன,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் தங்கிய வீட்டில் குண்டுபுகலிடமும் இல்லை. வீதிக்கு 200 மீட்டர் தூரத்தில் உள்ள இடத்துக்கு ஒவ்வொரு இரவும் ஓடிச் செல்ல வேண்டியுள்ளது,” என பேய்ன் தெரிவித்துள்ளார்.

டிமொத்தி பேய்ன் போன்றே மேலும் 14 கனடிய வீரர்களும் ஹாக்கி லீக் போட்டியில் விளையாட இஸ்ரேல் சென்று சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version