யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

ம.பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version