ஈரானில் இருந்து இலங்கையர்களை வௌியேற்ற இந்தியா உதவிக்கரம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இராணுவ சூழ்நிலை காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று (21) இந்த அறிக்கையை வெளியிட்டது.

அத்தோடு, ஈரானில் உள்ள நேபாள நாட்டினருக்கும் இந்தியா இதேபோன்ற உதவியை வழங்குகிறது.

‘ஆபரேஷன் இண்டஸ்’ திட்டத்தின் கீழ் இரு அண்டை நாடுகளிலிருந்தும் குடிமக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version