கனடாவின் க்யூபெக்கின் வடகிழக்கு பகுதியில் உள்ள நடாஷ்குவான் பகுதியில், மருத்துவ அவசர போக்குவரத்துக்காக பறந்த எயர் மெடிக் ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு ஏரியில் விழுந்துள்ளது.
இந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்த நால்வர் காணாமல் போயுள்ளனர். விபத்து வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் இடம்பெற்றதாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (TSB) பேச்சாளர் நிக் டெஃபால்கோ தெரிவித்துள்ளார்.
ஹெலிகொப்டர் ஒருவரை மருத்துவ அவசர நிலை காரணமாக ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருந்தபோது, புறப்பட்ட சில நிமிடங்களில் ஏரியில் விழுந்ததாக TSB கூறியுள்ளது.
கனடாவில் ஹெலிகொப்டர் விபத்து;நான்கு பேரை காணவில்லை | Montreal Helicopter Crash Natashquan
ஹெலிகாப்டரில் நான்கு ஊழியர்களும், ஒரு பயணியும் இருந்ததாக எயர் மெடிக் நிறுவனத்தின் பேச்சாளர் ரபாயல் போர்கால்ட் தெரிவித்தார்.