சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் குறித்து இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் சிவில் சமூகத்தில் இராணுவத்தை அவதூறு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் மோசடியான ஆவணங்கள் மூலம் தனிப்பட்ட காரணங்களுக்காக பல அதிகாரிகள் இராணுவத்திலிருந்து நீக்கப்படுவதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என அந்த அறிக்கையில் ​மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version