கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் மிகவும் விரும்பப்படும் வங்கி வர்த்தக நாமமாகவும், ஒட்டுமொத்தமாக நாட்டின் இரண்டாவது மிகவும் விரும்பப்படும் சேவை வர்த்தக நாமமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதே வேளை முன்னணி வர்த்தக சஞ்சிகையான LMD ஆல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கிணங்க கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் பிரிவான ComBank Digital ஆனது இலங்கையின் மிகவும் விரும்பப்படும் இலத்திரனியல் வணிக (நிதி) வர்த்தக நாமமாக பெயரிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வாக்கினை அடிப்படையாகக்கொண்ட இந்த ஈர்க்கக்கூடிய மூன்று அங்கீகாரங்களும் ஜனவரி மாதம் PepperCube Consultants நடத்திய விரிவான ஆய்வின் விளைவுகளாகும். LMD வாசகர்களிடையே மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமங்களை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்ட இந்த ஆய்வானது நுணுக்கமான ஆய்வு முறைகள் மற்றும் தரவு பகுப்பாய்வு நுட்பங்களை அடிப்டையாகக்கொண்டதாகும். இது LMD இன் வாசகர் தரவுத்தளத்திலிருந்து 400 பேரின் பதில்களை அடிப்படையாகக் கொண்டதுடன் பயிற்சி பெற்ற நிபுணர்களால் தொலைபேசி மூலம் இந்த நேர்காணல் ஆனது மேற்கொள்ளப்பட்டது.
இந்த மாதிரி ஆய்வானது பல்வேறு மக்கள்தொகைப் பிரிவுகளைக் கொண்டிருந்ததுடன் இதில் 52 சதவீதம் பெண்கள் மற்றும் 48 சதவீதம் ஆண்கள் பதிலளித்தனர், மேலும் இதில் மேல், தென், மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களின் முக்கிய பிராந்தியங்களைச் சேர்ந்த தனிநபர்களும் அடங்குவர்.
ஒரு வர்த்தக நாமத்தின் இறுதி வெற்றியானது அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெறுவதாகும்,ஏனெனில் அந்த அன்பானது நம்பிக்கை மற்றும் திருப்தியினை அடிப்படையாகக்கொண்டு கட்டமைக்கப்படுவதுடன் இது நேர்மறையான வாடிக்கையாளர் அனுபவங்கள் மூலம் உருவாக்கப்படுகிறது, என்று கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கூறினார்.
பொதுமக்களின் உணர்வுகள் குறித்த இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பின் முடிவுகள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் இது கொமர்ஷல் வங்கியின் இலத்திரனியல் வணிக தீர்வுகள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் வலுவான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது, இது எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கொமர்ஷல் வங்கியானது இந்த ஆண்டின் ஆரம்பத்தில், SLIM Kantar மக்கள் விருதுகள் 2025 இல், தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஆண்டின் மக்கள் தனியார் வங்கி சேவைகள் வர்த்தகநாமம் ஆக தெரிவு செய்யப்பட்டது. இது நாட்டின் மிகவும் பிரபலமான தனியார் துறை வங்கி என்ற வங்கியின் அந்தஸ்திற்கு வழங்கப்பட்ட மேலும் ஓர் அங்கீகாரமாகும். உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.