கனடாவில் காற்றுத்துப்பாக்கிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் கல்கரி பகுதியில் காற்றுத் துப்பாக்கிகளின் பயன்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏர்சாஃப்ட், பெலட் மற்றும் பிபி கன்கள் (Airsoft, Pellet, BB Guns) தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அவை தற்போது பொது பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன என்று கால்கரி நகர பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நகர எல்லைகளுக்குள் இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்துதல் சட்ட விரோதமானது எனவும் இதன் தீவிர தாக்கங்களை இளைஞர்கள் உணரவில்லை எனவும் பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் காற்றுத்துப்பாக்கிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Canada Air Gun Problems

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 333 காற்றுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு முழுவதும் 817 காற்றுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு சம்பவம் காற்றுத்துப்பாக்கி தொடர்பாக நடைபெறுவதாகவும், அதில் பாதியிலும் இளைஞர்கள் தான் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version