கனடாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து; சாரதியின் திறமையால் உயிர் தப்பிய பயணிகள்

கனடாவின் மிசிசாகாவில் பயணிகள் பேருந்து ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சாரதியின் திறமையால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மிசிசாகா நகரில் மிய்வே (MiWay) பேருந்தொன்று திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிததுள்ளனர்.

தீ விபத்து மிசிசாகா சாலையின் மேற்கு பகுதியில் உள்ள எக்ளிங்டன் அவென்யூ மற்றும் தி சேஸ் சந்தியில் இரவு 6 மணியளவில் ஏற்பட்டதாக மிசிசாகா நகர சபை பேச்சாளர் ஐரீன் மெக்கச்சியன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து; சாரதியின் திறமையால் உயிர் தப்பிய பயணிகள் | Driver And 5 Passengers Escape Bus Fire

சாரதி தனது புத்திசாலித்தனமான நடவடிக்கையின் மூலம் தன்னையும், அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வெளியே அழைத்துவந்துள்ளார்.இதனால் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என்று மெக்கச்சியன் மேலும் தெரிவித்துள்ளார்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. விபத்துக்குள்ளான பேருந்து விசாரணைக்காக நகரப் போக்குவரத்து மேம்பாட்டு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உடனடி உதவியளித்த போக்குவரத்து, தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு நகர நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

சிறப்பாக செயல்பட்ட பேருந்து ஓட்டுனருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version