புகழ்பெற்ற பேராசிரியர் Philip Kotlerஇன் ‘Essentials of Modern Marketing’இன் இலங்கை மற்றும் மாலைதீவு பதிப்பில் INSEE சங்ஸ்தா சீமெந்து ஒரு Case study ஆக இடம்பெற்றுள்ளது
இலங்கையின் மிகவும் நம்பகமான சீமெந்து வர்த்தக நாமமான INSEE சங்ஸ்தா, பேராசிரியர் Philip Kotlerஇன் Essentials of Modern Marketing’இன் இலங்கை மற்றும் மாலைதீவு முதற் பதிப்பில் முக்கிய ஆய்வு மாதிரியாக இடம்பெற Kotler Impact Inc. நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், இலங்கையின் கட்டுமானத் துறையில் INSEE சங்ஸ்தாவின் அபாரமான வர்த்தக நாம மீள்தன்மை மற்றும் சந்தை தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இது தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம செயற்பாட்டு அதிகாரி துசித் குணவர்ணசூரிய, வணிக பணிப்பாளர் சஃபீகான் சித்தீக் மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் கயனி பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை Kotler Impactஇன் தேசிய பிரதிநிதி டென்சில் பெரேரா முறைப்படுத்தினார்.
இந்த மைல்கல் வெளியீட்டில் INSEE சங்ஸ்தாவின் உள்ளடக்கம், பல வருடங்களாக குறிப்பிடத்தக்க தொழில்துறை மாற்றங்கள் மற்றும் உரிமை மாற்றங்கள் இருந்தபோதிலும் அசைக்க முடியாத சந்தை நம்பிக்கையைப் பேணுவதில் வர்த்தக நாமத்தின் அற்புதமான பயணத்தை பறை சாற்றுகிறது. நாடு முழுவதும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீடு கட்டுபவர்கள் மத்தியில் விரும்பப்படும் தெரிவாக இலங்கையின் சீமெந்து சந்தையில் முன்னணி வர்த்தக நாமமான INSEE சங்ஸ்தா தொடர்ந்து இருந்து வருகிறது.
Kotler Impact இன் அங்கீகாரம், வர்த்தக நாமத்தின் சிறப்பிற்கும் தர நிலைத்தன்மைக்கும் INSEE சங்ஸ்தாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. வர்த்தக நாமத்தின் பரிணாம வளர்ச்சி முழுவதும் தனது தயாரிப்பு தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாத INSEE சங்ஸ்தா, இலங்கை கட்டுமான நிறுவனங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ஒருபோதும் தவறியது இல்லை. இவ் வர்த்தக நாமம், ஒவ்வொரு சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு வாடிக்கையாளர்களுடனான தொடர்பை வலுப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர் மனதில் வர்த்தக நாமத்தின் நிலைத்தன்மையை பராமரித்தல் மற்றும் சிக்கலான பேரின-சுற்றுச்சூழல் மாற்றங்களை வழிநடத்தும் நிறுவனத்தின் திறன் ஆகியன INSEE சங்ஸ்தாவை நவீன வர்த்தக நாம முகாமைத்துவத்திற்கு ஒரு முன்மாதிரியான ஆய்வு மாதிரியாக மாற்றியுள்ளது. இலங்கையில் சீமெந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்த வர்த்தக நாமத்தின் முன்னோடி பங்கு மற்றும் மாற்றங்களை எதிர்கொண்டு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் திறன் என்பன இணைந்து உலகளவில் சந்தைப்படுத்தல் நிபுணர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் மாதிரியாக இதை மாற்றியுள்ளது.
பேராசிரியர் Philip Kotlerஇன் வெளியீட்டுடன் INSEE சங்ஸ்தாவின் இணைவு ஆனது நிலையான வர்த்தக நாம கட்டமைப்பில் ஒரு சிந்தனைத் தலைவராக நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது. இந்த ஆய்வு மாதிரி வெற்றிகரமான வர்த்தக நாம உத்திகள் குறித்த உள்ளூர்மயமாக்கப்பட்ட நுண்ணறிவுகளை வழங்கும் அதே வேளை, இது இலங்கை மற்றும் மாலைதீவு முழுவதும் வணிகங்கள், மாணவர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்களுக்கு ஒரு மதிப்புமிக்க வளமாக செயல்படும்.
இந்த அங்கீகாரம், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கட்டுமானத் துறைக்கான கொன்கிறிட் மற்றும் பிற சீமெந்து தீர்வுகளில் நம்பகமான பங்காளியாக இலங்கைச் சந்தை மற்றும் நுகர்வோருக்கு சேவை செய்வதில் INSEE சங்ஸ்தாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.
சந்தைப்படுத்தல் கல்வியை மேம்படுத்துவதற்கும், அறிவுப் பகிர்வு மற்றும் தொழில்துறையின் சிறந்த நடைமுறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் INSEE சங்ஸ்தாவின் உறுதிப்பாட்டை இந்த உள்ளடக்கம் மேலும் வலுப்படுத்துகிறது.