அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு வரும் ஜூலை 23 ஆம் திகதி அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நொச்சியாகமவில் உள்ள பி.டி.ஜி. அக்ரி பிஸ்னஸ் நிறுவனத்திடமிருந்து பெருமளவு சோளத்தினை பெற்று, அதற்குரிய தொகையை செலுத்தாமல், 05 கோடியே 29 இலட்சம் ரூபாய் மோசடி செய்து நம்பிக்கையை மீறிய குற்றச்சாட்டின் கீழ், மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு அழைக்கப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறு நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வழக்கு வரும் ஜூலை 23 ஆம் திகதி அழைக்கப்படவுள்ள நிலையில், சந்தேக நபர் அர்ஜுன் அலோசியஸ் மீண்டும் அனுராதபுர முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version