கனடாவிற்குள் சில சர்ச்சைக்குரிய ஈரானிய பிரஜைகள் ஊடுறுவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈரானிய பிரஜைகள் ஊடுறுவியமை தொடர்பாக கனடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் Canada Border Services Agency (CBSA) தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில், மூன்று சந்தேகத்துக்குரியவர்களுக்கு நாடு கடத்தும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், ஒருவரை கனடாவிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கனடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கனடாவிற்குள் ஊடுறுவியுள்ள ஈரானியர்கள் | Iranian Officials Allowed Into Canada
ஈரானிய பிரஜைகள் அனைவரும் கனடாவுக்கு வருவதற்கு விசா விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், அவர்களது விண்ணப்பங்கள் கனடிய குடியேற்ற, அகதிகள் மற்றும் குடிமக்கள் அமைச்சகம் (IRCC) மூலமாக கவனமாக பரிசீலிக்கப்படுகின்றன,” என தெரிவிக்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டு, கனடா அரசாங்கம் ஈரான் அரசை ஒரு பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் ஆட்சி என வகைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.