கனடாவில் 2025ஆம் ஆண்டு மதுபான விற்பனை கணிசமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இது பொருளாதார நிச்சயமற்றத்தன்மை, அமெரிக்காவிலிருந்து பீர், வைன் மற்றும் ஸ்பிரிட்ஸ் போன்ற மதுபானங்களின் இறக்குமதி சரிந்ததுடனும் நேரடி தொடர்புடையது என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ள உலகளாவிய வர்த்தக போர், மற்றும் அதனைத் தொடர்ந்து பல்வேறு கனடிய மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களை புறக்கணித்ததும் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் மதுபான விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Trump Trade War Alcohol Sales Dropped
இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் கனடிய நுகர்வோருக்கு மூன்றாவது முறை நேரும் நிதி நெருக்கடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கணக்கெடுப்புகள் படி, 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் அனைத்து வகை மதுபானங்களின் விற்பனையும் குறைந்துள்ளது.
“நுகர்வோர் மிகவும் பதட்டமான மனநிலையுடன் இருக்கின்றனர். விருப்ப அடிப்படையில் செலவிடும் பணங்களில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது.
சந்தை மிகவும் மெதுவாக நகர்கிறது,” என Beer Canada நிறுவனத் தலைவர் சிஜே ஹெலி கூறியுள்ளார்.
கடந்த 2024 ஏப்பிரலில் 54 மில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க வைன் கனடாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2025 ஏப்பிரலில் அந்த எண்ணிக்கை 3 மில்லியன் டொலராக பாரிய வீழச்சியை பதிவு செய்துள்ளது.