கனடாவில் மசாஜ் நிபுணரின் தகாத செயல்

கனடாவின் மில்டனில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்தில் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிபுணர் ஒருவர், ஒரு பெண் மீது மசாஜ் சிகிச்சை செய்யும் போது பாலியல் வன்முறை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மில்டனில் ஸ்டீல்ஸ் அவென்யூ 1130-ல் அமைந்துள்ள “Massage Addict” கிளினிக்கில் இடம்பெற்றதாக ஹால்டன் பிராந்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் ஒரு வயது முதிர்ந்த பெண் எனவும், சிகிச்சை நேரத்தில் இந்த வன்முறை நடந்ததாகவும் புகார் செய்துள்ளார்.

கனடாவில் மசாஜ் நிபுணரின் தகாத செயல் | Milton Massage Therapist Charged

இதையடுத்து, மிசிசாகாவில் வசிக்கும் 52 வயதுடைய அய்மன் அல் காசம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அய்மன் அல் காசம் மிசிசாகா உள்ளிட்ட பிற மசாஜ் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளதைக் காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version