பிரத்தியேகமான சலுகைகள் மற்றும் தினந்தோறும் கிடைக்கும் வரப்பிரசாதங்களுடன் பயனர்களுக்கு வெகுமதிகளை வழங்கி, வலுவான, வாழ்க்கைமுறை மீது கவனம் செலுத்தியுள்ள நம்பிக்கை அங்கத்துவ நிகழ்ச்சித்திட்டமான ‘Cheer Points’ மூலமாக, ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் வாடிக்கையாளர்களது அனுபவங்களை தொடர்ந்தும் மேம்படுத்தி வருகிறது. பாரம்பரியமான தொலைதொடர்பாடல் சேவை நன்மைகளுக்கும் அப்பாற்சென்று, பொருட் கொள்வனவு, உணவு விருந்து, பொழுதுபோக்கு, கல்வி, உடற்பயிற்சி மற்றும் பல துறைகளில் தள்ளுபடிகளையும், வரப்பிரசாதங்களையும் அனுபவித்து மகிழ்வதற்கான புத்தம்புதிய, விநோதமான வழியை Cheer Points வழங்குகின்றது.
வார இறுதியில் ஓய்வாக பொழுதைப் போக்குவதற்கு வெளியில் செல்ல விரும்பினாலோ, ஆறுதலாக அமர்ந்து கோப்பியை சுவைத்து மகிழ விரும்பினாலோ, அல்லது உங்களுடைய அலுமாரிகளில் பழையவற்றுக்குப் பதிலாக புதிய ஆடை, அணிகலன்களை கொண்டிருக்க விரும்பினாலோ, உண்மையான வாழ்க்கைத் தருணங்களுக்கு மதிப்பைச் சேர்ப்பிக்கும் சலுகைகளுடன் ஹட்ச் வாடிக்கையாளர்களை Cheer Points இணைக்கின்றது. Scope Cinemas, Spring & Summer, Pearl Bay, Fitness First, Chinese Dragon, Mosh, ANC, FitsAir, Kandy Selection, Uptown, Sigiriya Village, The Palms, Club Palm Bay, Hangla, Colombo Reinsurance Brokers, NCG Green Energy, Cara Nail Studio, மற்றும் SLASH ஆகிய இடங்களில் பிரத்தியேகமான வெகுமதிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் 18 பிரபலமான வாழ்க்கைமுறை வர்த்தகநாமங்களுடனான வலுவான ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சித்திட்டம் வளர்ச்சி கண்டுள்ளது.
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வர்த்தகநாமம், தொடர்பாடல்கள் மற்றும் நம்பிக்கை அங்கத்துவத் திட்டம் ஆகியவற்றுக்கான பொது முகாமையாளர் கௌஷலா அமரசேகர அவர்கள் வளர்ச்சி கண்டு வருகின்ற இத்திட்டம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கையில்: “Cheer Points மூலமாக தரவு (டேட்டா) மற்றும் இணைப்பிற்கு அப்பால், மகிழ்ச்சியான, பயன்மிக்க, மற்றும் எமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைமுறைகளில் உண்மையாக அங்கம் வகிக்கின்ற நிகழ்ச்சித்திட்டமொன்றை தோற்றுவிப்பதற்கு நாம் விரும்பினோம். மக்கள் தினந்தோறும் வாழ்வை இன்னும் சிறப்பாக அனுபவித்து மகிழ உதவுகின்ற அதேசமயம், அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு நாம் இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
வழக்கமான நம்பிக்கை அங்கத்துவத் திட்டங்களைப் போலவன்றி, இலகுவான, நெகிழ்வான மற்றும் நிஜ உலகத்தை முற்றிலும் அனுபவிப்பவதற்கு வழிவகுக்கும் வகையில் Cheer Points வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தனை புள்ளிகள் பெற்றால் இந்த வகைக்குள் அடங்கும் என்ற சிக்கலான நம்பிக்கை அங்கத்துவத் திட்டமாக அல்லாது, வளர்ச்சி கண்டு வருகின்ற வாழ்க்கைமுறை கூட்டாளர்களின் வலையமைப்பினூடாக அர்த்தமுள்ள நன்மைகளும், சலுகைகளும் இதன் மூலமாகக் கிடைக்கின்றன.
வாடிக்கையாளர் அனுபவத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில், தனது வாடிக்கையாளர்களை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்துக்கின்ற புதிய வழிமுறைகளை ஹட்ச் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதுடன், தினந்தோறும் மதிப்பைத் தோற்றுவிப்பதில் நிறுவனத்தின் ஆழமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் விரிவான வாழ்க்கைமுறை வெகுமதிகள் கட்டமைப்பாக Cheer Points தோன்றியுள்ளது.
வாடிக்கையாளர்கள் எங்கேயும், எப்போதும் தமக்கான வெகுமதிகளை அணுகி, பெற்று மகிழ்வதற்கு இலகுவானதாகவும், சௌகரியமானதாகவும் ஆக்குவதற்காக, இந்த வியப்பூட்டும் சலுகைகளை HUTCH SelfCare Mobile App மூலமாக மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும். Cheer Points களை எவ்வாறு ஈட்ட ஆரம்பிப்பது மற்றும் மீளப் பயன்படுத்திக் கொள்வது குறித்த மேலதிக தகவல் விபரங்கள், கூட்டாளர் வர்த்தகநாமங்கள் மற்றும் அவர்களிடம் கிடைக்கின்ற சலுகைகள் குறித்த முழு விபரப்பட்டியல் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு https://hutch.lk/cheer-points/ என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.