சியெட், இறப்பர் விவசாயிகளின்பிள்ளைகளுக்கு பயனளிக்கும் திட்டத்தில் 6வது பாடசாலைக்கு உதவி வழங்கியது

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது, சமூக மேம்பாடு மற்றும் நிலையான மூலதனம் பெறுவதற்கான அதன் நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், இலங்கை இறப்பர் விவசாய சமூகத்தின் பிள்ளைகளுக்கு அத்தியாவசிய பாடசாலைப் பொருட்களை வழங்கும் ஆறாவது நிகழ்வை இந்த முறை மத்துகமவில் உள்ள மீகம கனிஷ்ட வித்தியாலயத்தில் நடத்தியது.

சியெட்டின் முதன்மை சமூகப் பொறுப்பு முயற்சியான “சியெட் கெயார்ஸ்” திட்டத்தின் ஒரு பகுதியாக, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான எழுபது மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள், பாதணிகள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த சமீபத்திய நிகழ்வின் மூலம், மத்துகம, இரத்தினபுரி, காலி, மொனராகலை, கண்டி மற்றும் ஹதரலியத்த உள்ளிட்ட முக்கிய இறப்பர் உற்பத்திப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த திட்டத்தினால் ஆதரிக்கப்படும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது.

சியெட் களனி நிறுவனம் தனது இயற்கை இறப்பர் தேவைகளில் 100% சதவிதம் உள்நாட்டிலேயே பெறுகிறது. நாடு முழுவதும் இறப்பர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு இதன் மூலம் வாழ்வாதாரத்தை வழங்குகிறது. ,சியெட்டின் சமூக பொறுப்புணர்வு முயற்சிகள் இந்த விவசாயிகள் தமது விநியோகச் சங்கிலியில் வகிக்கும் முக்கிய பங்கை உணர்ந்து அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இதற்கிணங்க கல்வி ஒரு முக்கிய தேவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீகம கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் சியெட் களனியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ஷமல் குணவர்தன, சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் சந்திரா டயர் சென்டரின் திரு. சரத் பிரேமச்சந்திர, சமிந்த டயர் சேர்வீஸின் திரு. சமிந்த புஷ்பகுமார, உடகேபொல டயர் சென்டரின் திரு. கித்சிறி செனவிரத்ன உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட சியெட் நிறுவன விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பங்கேற்றனர், இதில் மாணவர்கள் நிகழ்த்திய பாரம்பரிய நடனங்களும் இடம்பெற்றன.

“இறப்பர்விவசாய சமூகத்திற்கான எமது அர்ப்பணிப்பான செயற்பாடுகள் சியெட்டின் நெறிமுறைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்,” என்று திரு. குணவர்தன கூறினார். “சியெட் கெயார்ஸ் மூலம், இந்த விவசாயிகள் எமது தொழில்துறைக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிப்பதுடன் மட்டுமல்லாமல், கவனம் செலுத்தும், தாக்கத்தை ஏற்படுத்தும் ஆதரவின் மூலம் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை உறுதியான முறையில் மேம்படுத்துவதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”

2025 ஆம் ஆண்டில் நாட்டின் முன்னணி வர்த்தக இதழான LMD ஆல் இலங்கையின் “மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தகநாமமாக” சியெட் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version